ஏராளமான மருத்துவ குணமிக்க இந்த நெல்லிக்கனி பழச்சாறு , கொழுப்புக்கள் கரைவதற்கும், எலும்புகள் ஆரோக்கியமாகுவதற்கும் உதவுகின்றது. இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால் நமது உடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும், இவை உடல் வெப்பத்தை தணிக்கவும், இரத்தத்தை சுத்தமாகுவதற்கும், சரும அழகை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றது .
இவ்வளவு மருத்துவ பயன்களை உள்ளடக்கியுள்ள நெல்லிக்கனியில் எப்படி எளிய முறையில் பழச்சாறு தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்கனி - 6
கறிவேப்பிலை- சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
புதினா - சிறிதளவு
உப்பு -தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
முதலில் புதினா, கொத்தமல்லியை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும்
பின்பு இஞ்சியின் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்வதோடு , நெல்லிக்கனியின் விதைகளை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளுடன் கறிவேப்பிலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும் .
வடிகட்டிய பழச்சாற்றை குளிரூட்டியில் வைத்து பரிமாறவும்.
இப்போது சத்தான நெல்லிக்கனி பழச்சாறு தயார் . இலகுவாக செய்யக்கூடியதும் ஏராளமான மருத்துவக் குணங்களை உடையதுமான நெல்லிக்கனி பழச்சாற்றை குடும்பத்துடன் பருகி மகிழுங்கள்