இவ்வாறு பெண்கள் தங்களின் கை, கால்களில் இருக்கின்ற நகங்களை ஆரோக்கியமானதாகவும், வலிமையானதாகவும் வைத்துக்கொள்வது எப்படி? என்பது குறித்த சில அழகு குறிப்புகளை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
டீ-ட்ரீ எனப்படும் எண்ணெய் தற்போது பல சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கின்றன,சிறிய பஞ்சை எடுத்து, அதில் சில துளிகள் டீ ட்ரீ எண்ணெயை விட்டு நனைத்து, உங்களின் கை மற்றும் கால் நகங்களின் மீது வாரத்திற்கு ஒரு முறை தடவி வருவதால் நகங்கள் ஆரோக்கியமாதாக இருக்கும்.
சில பெண்கள் நிறப்பூச்சு அதிகம் பயன்படுத்துவதால் அவர்களின் நகங்கள் சில சமயங்களில் அதீத மஞ்சள் நிறத்தில் காணப்படும். இத்தகைய பிரச்சினையை தீர்க்க நமது வீட்டில் இருக்கின்ற எலுமிச்சை பழம் மற்றும் பேக்கிங் சோடாவே சிறந்த தீர்வாக இருக்கும். எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு பேக்கிங் சோடாவைக் கலந்து,பேஸ்ட் பதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு நகங்களின் மீது தேய்த்து 10 நிமிடங்கள் நகங்களில் ஊறச் செய்த பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும் .
நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் பல வகையான ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளன. அதேபோல நகங்களுக்கும் பாதுகாப்பையும், சீரான வளர்ச்சியையும் கொடுக்கும். நேரம் கிடைக்கும் பொழுது சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்து கை மற்றும் கால் நகங்களின் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் .
சில வகை உணவுகளை தயார் செய்ய வினிகர் பயன்படுத்தப்படுகிறது. அந்த வினிகரில் பல வகைகள் உள்ளன. குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகர் சில சமயங்களில் அழகு சாதன பொருட்களில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது.உங்களின் நகங்கள் எளிதாக உடையும் நிலையில் இருந்தாலும், அதிக அளவு மஞ்சள் பிடித்திருந்தாலும் ஒரு கிண்ணத்தில் சம அளவு ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சம அளவு தண்ணீரை ஊற்றி, நன்கு கலந்து கொண்டு அதில் உங்கள் நகங்களை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும் பின்பு கைகளை கழுவி விட வேண்டும்
நகங்கள் வலுவிழந்து அடிக்கடி உடைகிறது என்றால் விட்டமின் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் விட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.நகங்கள் வறண்டு போகும் போது அவற்றில் விரிசல் ஏற்பட்டு உடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நகங்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம்.
இப்படி வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் உங்களது நகங்களை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளலாம்.