சீரன் திரைப்படத்தில் சோனியா அகர்வால், இனியா, ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், சூப்பர் குட் சுப்ரமணி, ஆரியன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி என பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் கார்த்திக் மற்றும் நியாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சீரன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது நடிகை இனியா பல விடயங்களை பகிர்ந்துள்ளார். இனியா இந்த திரைப்படத்தில் தனது இடையை அதிகரித்து பூங்கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை எனவும் குறிப்பிட்ட அவர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஜேம்ஸ் கார்த்திகையும் வாழ்த்தியுள்ளார்.
நடிகர் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திகை பார்த்து தானும் சில தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே அண்மையில் நடிகை இனியா தயாரிப்பாளராக களமிறங்குவார் என எதிர்பாக்கப்படுகிறது.