இத்திரைப்படத்தில் பாலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தீபிகா படுகோனி ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
பேன் இந்தியா திரைப்படமான ஜவான் செப்டம்பர் 7 ம் திகதி திரையரங்கங்களில் திரையிடப்பட்டு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதாவது 'ஜவான்' திரைப்படம் 907 கோடி ரூபாவுக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்து குறித்த போஸ்ட்டரை வைரலாகி வருகின்றனர்.