இவர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் அனிருத்தின் இசை பெரிது பேசப்பட்டது.
இப்படி தமிழ் திரையுலகில் கலக்கி கொண்டிருந்த அனிருத்,அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் மூலம் பொலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார்.
இப்படம் இந்திய மதிப்பில் ரூ.907 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் விரைவில் ரூ.1000 கோடியை எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் படக்குழுவினர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பாடல் பில்போர்ட் தளத்தில் இடம்பெற்றுள்ளது.அதாவது, உலகின் பிரபலமான பில்போர்ட் தளத்தின் குளோபல் 200 பிரிவில் 'ஜவான்' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த 'சலேயே' (chaleya) பாடல் 97-வது இடத்தை பிடித்துள்ளது.
இதனை அனிருத் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.