இலங்கை , இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விளையும் காய்கறிகளை விடவும் ஏனைய நாடுகளில் விளைவிக்கப்படும் மரக்கறிகள் அளவிலும் நிறத்திலும் சில சமயங்களில் வித்தியாசப்படும்.
உலக அளவில் அன்றாட சமையலுக்காக வெங்காயமே அதிகளவில் பயன்படுத்தப்படும் உணவு பொருளாகும். சுவைக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் அழகுக்காகவும் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.
உலக நாடுகளில் பல விதமான கண்காட்சிகள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன. அதில் சில மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெறுகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியை முன்னிட்டு காய்கறி போட்டி ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்தின் வடக்கு யோர்க்ஷயர் பகுதியை சேர்ந்த விவசாயி கரேத் கிரிபின் என்பவர், தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிப்படுத்தினார்.
அந்த வெங்காயம் 8.97 கிலோ எடை கொண்டதாக இருந்தது. இந்த வெங்காயம் உலகிலேயே பெரிய வெங்காயம் என்று உலக சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2014-ஆம் ஆண்டு 8.4 கிலோவில் பெரிய வெங்காயம் வளர்க்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிபின் தோட்டத்தில் வளர்ந்த வெங்காயத்துடன் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்த பயனர்கள் சிலர், இவ்வளவு பெரிய வெங்காயத்தை எப்படி வளர்க்க முடிந்தது? என கேட்டு வருகின்றனர்.
உலகம் அளவில் அன்றாட சமையலுக்காக வெங்காயமே அதிகளவில் பயன்படுத்தப்படும் உணவு பொருளாகும்.
உலக நாடுகளில் பல விதமான கண்காட்சிகள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன. அதில் சில மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெறுகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியை முன்னிட்டு காய்கறி போட்டி ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இங்கிலாந்தின் வடக்கு யோர்க்ஷயர் பகுதியை சேர்ந்த விவசாயி கரேத் கிரிபின் என்பவர், தனது தோட்டத்தில் விளைந்த பிரமாண்டமான வெங்காயத்தை கொண்டு வந்து காட்சிபடுத்தினார்.