தினமும் நீங்கள் ஏன் தயிரை உட்கொள்ள வேண்டும் என்ற காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள் .
தயிர் நோய் மற்றும் கிருமியை எதிர்த்துப் போராடும் சக்தியை கொண்டிருப்பதாகக் அறியப்படுகிறது . இவை உடலுக்கு ஒரு மருந்தாக செயல்படுகின்றன.ஆகவே தயிரை உட்க்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளுங்கள் .
தயிர் உங்கள் குடலுக்கு நல்லது, செரிமானத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது. வயிற்றுப்போக்கு மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது .
தயிர் இரத்த ஓட்டத்தை சுத்திகரித்து இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றது . உடலில் இருந்து கெட்ட கொழுப்பைக் குறைக்கின்றன. தயிரில் உள்ள கல்சிய உள்ளடக்கம் இதய வால்வுகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது .
ஒரு கிண்ணம் தயிரினை தவறாமல் உட்கொள்வது உங்கள் உடலுக்கு அதிகபட்ச ஊட்டச்சத்து பெற உதவுகிறது. மேலும் ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான பலமான தாதுக்களை கொடுக்கிறது .
இவ்வாறாக உடலிற்கு அதிகம் நன்மை தரக்கூடிய தயிரினை உட்க்கொண்டு , உங்களது உடல் ஆரோக்கியத்தினை அதிகரித்து கொள்ளுங்கள் .