பொலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான்.
இவர் 1992-ஆம் ஆண்டு 'தீவானா' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து,முன்னணி நடிகர்கள் பட்டியலில் தனது பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து தயாரித்திருந்த 'ஜவான்' திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இந்திய மதிப்பில் ரூ.1000 கோடி வசூலை நெருங்கவுள்ளது.
இந்நிலையில்,நடிகர் ஷாருக்கானை இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் சந்தித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள கம்பீர், "ஷாருக்கான் பொலிவுட்டிற்கு மட்டும் ராஜா அல்ல,அனைவர் மனதிலும் அவர் ராஜாதான்.நாம் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் நான் அளவற்ற அன்புடனும் மரியாதையுடனும் திரும்பிச் செல்கிறேன்.உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.