இருப்பினும் , என்ன தான் நெல்லிக்காய் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சினைகளைக் கொண்டவர்கள் இதை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல. இப்போது யாரெல்லாம் நெல்லிக்காயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள் .
நெல்லிக்காய் இரத்தம் உறைவதைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டது. சாதாரண மக்கள் நெல்லிக்காயை உட்க்கொண்டு வந்தால், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அயாபத்தைக் குறைக்கலாம்.ஆனால் ஏற்கனவே இரத்தம் தொடர்பான பிரச்சினையைக் கொண்டவர்கள் நெல்லிக்காயை உட்க்கொள்வது நல்லதல்ல.
அறுவை சிகிச்சை செய்ய வேண்டி ஏற்பட்டால், நெல்லிக்காயை சாப்பிடுவதை சிறிது காலம் தவிர்க்க வேண்டும். அதிகமாக நெல்லிக்காயை உட்கொண்டால், இரத்தம் உறையாமல் இரத்தக்கசிவு அதிகமாக ஏற்படும்.
நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.சர்க்கரை நோயைக் கொண்டவர்களுக்கு நல்லதாக கருதப்பட்டாலும், இரத்த சர்க்கரை மிகவும் குறைவாக இருப்பவர்களுக்கு நெல்லிக்காய் நல்லதல்ல.
நெல்லிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால் அந்த நெல்லிக்காயை அளவுக்கு அதிகமாக உட்க்கொண்டால், அது வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சினைகளை வரவழைக்கும்.
நெல்லிக்காய் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் நெல்லிக்காயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இருப்பினும், இந்த நெல்லிக்காயை அளவுக்கு அதிகமாக உட்க்கொண்டால், வயிற்றில் நார்ச்சத்து அதிகமாகி, அதன் விளைவாக மலச்சிக்கல் பிரச்சினையை சந்திக்க நேரிடும்.
இருப்பினும் நெல்லிக்காய் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சினைகளைக் கொண்டவர்கள் இதை உட்க்கொள்வது பாதுகாப்பானது அல்ல.அப்படியே சாப்பிட நேரிட்டால் மருத்துரின் ஆலோசனைக்கு பின் உட்க்கொள்ளுங்கள்.