ஜப்பானில் 14 நூற்றாண்டுகள் பழமையான நிறுவனமான “கோங்கோ குமி” இரண்டு அணுகுண்டு தாக்குதல்களுக்குப் பிறகும் சிதையாமல் கம்பீரமாக நிற்பது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
கொரியாவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலாளரான ஷிகெமிட்சு கோங்கோவால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இரண்டாம் உலக போரின் போது ஜப்பானை பாரியளவில் பாதித்த இரண்டு அணுகுண்டு தாக்குதல்கள், இயற்கை பேரழிவுகள் ஆகிவற்றை தாங்கி நிற்கும் உலகின் பழமையான நிறுவனமாக கருதப்படுகிறது.
குறித்த இந்த நிறுவனம் சுமார் 1,4000 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பத்தால் நடத்தப்படும் கட்டுமான நிறுவனமாகும். இதன் தலைமையகம் ஒசாகாவில் உள்ளதுடன் 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 40 தலைமுறைகளையும் தாண்டி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.