இலங்கை , இந்தியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இலங்கையிலும் ஒரு நாளைக்கு விபத்துக்களால் 30 பேர் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்க முயற்சித்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீதியில் சென்றுக்கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சிறு காயம் அடைந்த விமானி மற்றும் சாரதியை மீட்ட தீயணைப்பு துறையினர், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. குறித்த விபத்தின் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கார் இன்னொரு வாகனத்துடன் மோதி பார்த்திருக்கிறோம் ஆனால் விமானத்தில் மோதி பார்த்தது இல்லை. இந்த குறையை இந்த விபத்து தீர்த்து வைத்துள்ளதாக இணையவாசிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.