இவர் கிட்டத்தட்ட 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து,இந்தியாவின் முன்னணி கதாநாயகியாகவும்,அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார்.
சமீபத்தில் தமன்னாவின் அசத்தலான நடனத்தில் வெளியான ‘காவாலா’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
தமன்னா அண்மையில் "லஸ்ட் ஸ்டோரீஸ்" என்ற இணைய தொடரில் தன்னோடு நடித்த நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில்,இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவ்வப்போது விஜய் வர்மா மற்றும் தமன்னா போட்டோஷுட்கள் எடுத்து அவர்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.அது மட்டுமல்லாமல் சினிமா நிகழ்ச்சிகளிலும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
இந்நிலையில்,தமன்னாவின் திருமணம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,கூடிய விரைவில் திருமணம் நடைபெறும் எனும் வகையில் தமன்னா பதில் அளித்திருக்கிறார்.
அந்தவகையில் நடிகை தமன்னாவின் திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகுமென எதிர்பாக்கப்படுகின்றது.