இருப்பினும் ஆரோக்கியத்தை பாதிக்கும் எவ்வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ளுங்கள் .
தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்பதனை தவிர்ப்பது நல்லது . இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியமானது .
பழங்களை உண்ணும் போது தனியேதான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் , சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி போன்ற காய்கறிகளை சாப்பிடக்கூடாது.
அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் மிளகாய், ஊறுகாய் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது .
தோல் நோய் உள்ளவர்கள் கத்தரிக்காய், நிலக்கடலை, மீன், கருவாடு, அதிககாரம், அதிக புளிப்பு போன்றவறை தவிர்ப்பது நல்லது .
இவ்வாறாக உடல்நலத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை உட்க்கொண்டு ,கேடு விளைவிப்பவற்றை தவிர்த்து ஆரோக்கியத்தினை மேம்படுத்திக் கொள்ளுங்கள் .