Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
இவரால் மனித குலத்திற்கே கெட்டபெயர் - நடிகை திரிஷா கடும் கண்டனம் !

SooriyanFM Gossip - இவரால் மனித குலத்திற்கே கெட்டபெயர் - நடிகை திரிஷா கடும் கண்டனம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,151 Views
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்,லலித் தயாரிப்பில்,விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 19 ஆம் திகதி வெளியான திரைப்படம் லியோ. 

பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் இரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்,வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
 
இதனிடையே, இப்படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது,நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.இது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


இந்த நிலையில், நடிகை திரிஷா,மன்சூர் அலிகானுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “சமீபத்தில் மன்சூர் அலிகான் என்னை பற்றி சர்ச்சையாக பேசிய ஒரு வீடியோ எனது கவனத்திற்கு வந்தது.இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்.மேலும், இது பாலியல் அவமரியாதை,பெண்வெறுப்பு மற்றும் அவரது மோசமான மனநிலையை நான் காண்கிறேன்.அவருடன் அந்த படத்தில் சேர்ந்து நடிக்காததற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.இனிமேலும்,இது போன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.இவர் போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மன்சூர் அலிகானின் இந்த சர்ச்சை பேச்சுக்கு இதுவரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பாடகி சின்மயி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top