உலகளாவிய பிரசாரத்தின் அடையாளமான ஹம்மிங்பேர்டைக் கொண்டு 'மாற்றத்தை துரிதப்படுத்துதல்' எனும் கருப்பொருளின் கீழ் 2023 ஆம் ஆண்டு உலக கழிப்பறை தினம் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது.
இந்த பிரசாரம் ஒரு பிரபலமான தென் அமெரிக்க நாட்டுப்புறக் கதை மூலம் ஈர்க்கப்பட்ட ஒன்றாகும். அங்கு மனஉறுதி மிக்க ஹம்மிங்பேர்ட் பறவையொன்று, பொங்கி எழும் காட்டுத்தீயை அச்சமின்றி எதிர்கொள்கிறது.
இது தன்னால் முடியாத பணி என துவண்டுவிடாது, தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்ய அது தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அங்கு காண்பிக்கிறது.
இந்த ஹம்மிங்பேர்ட் பறவையும் அதனுடன் தொடர்புடைய கதையும் இலங்கைச் சூழலில் எதிரொலிக்கிறது. குறிப்பாக, சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் Harpic கொண்டுள்ள ஒரு தசாப்தத்திற்கு அதிக அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.
நாட்டிலுள்ள மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உலக மக்கள்தொகையில் சுமார் அரைவாசிப் பேரான 3.5 பில்லியன் மக்கள், இன்னும் பாதுகாப்பான கழிப்பறைகள் இல்லாதவர்களாக உள்ளனர்.
ஒவ்வொரு நாளும், 5 வயதுக்குட்பட்ட 1,000 குழந்தைகள் இந்த சுகாதார நெருக்கடியின் விளைவாக ஏற்படும் நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
இலங்கையில் கூட, சில மக்கள் பிரிவினருக்கு, சுகாதாரமான கழிப்பறைகள் மற்றும் பொதுக் கழிப்பறை வசதிகளுக்கான போதுமான அளவு அணுகல் இன்னும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு தசாப்த காலத்தில், உலக கழிப்பறை தினத்தை இலங்கையில் அனுஷ்டிப்பதற்கான அர்ப்பணிப்பைக் கொண்ட ஒரேயொரு நிறுவனமாக Harpic விளங்குவதோடு, இந்தப் பணியை அது உறுதியுடன் நிறைவேற்றி வருகின்றது.
2017 இல் ஆரம்பிக்கப்பட்ட 'ஹார்பிக் சுவ ஜன மெஹெயும’ (Harpic Mission Wellbeing' (சுகவாழ்வுக்கான பணி), இந்தப் பயணத்தில் ஒரு மைல்கல்லாகும்.
Harpic இன் 'ஹார்பிக் சுவ ஜன மெஹெயும’ (Harpic Mission Wellbeing) பணியின் மையத்தில், எமது எதிர்கால சந்ததியினரை சரியான பழக்கவழக்கங்களுடன் சுகாதாரத்தின் சம்பியன்களாக மாற்றுவது எனும், ஒரு முக்கியமான அர்ப்பணிப்பு உள்ளது.
இவ்வருடம், பெண் பிள்ளைகளின் கல்வியில் விசேட கவனத்தை Harpic செலுத்துகிறது. அத்தியாவசிய சுகாதார நடைமுறைகளை உட்புகுத்துவதன் மூலம் அவர்களது சுகாதார தரத்தை அது உயர்த்துகிறது.
இந்த தனித்துவமான கல்வித் திட்டமானது, கல்வி அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்ப்பட்டதோடு, நிபுணர்களின் ஆதரவுடன், அசுத்தமான கழிப்பறைகள் போன்ற அசுத்தமான சூழல்களில் இளம் பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய சுகாதார பிரச்சினைகள் மற்றும் ஏற்படக் கூடிய உடல்நல பாதிப்புகள் பற்றிய அறிவு வழங்கப்பட்டது.
Harpic நடமாடும் கழிப்பறை திட்டம் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் உதவி மிகவும் அவசியப்படும் தருணத்தில் அங்கு தனது ஈடுபாட்டை மேற்கொள்வதற்கான அர்ப்பணிப்பு ஆகியன Harpic இன் நிலையான வெற்றியின் அடிப்படை அம்சமாகும்.
Harpic நடமாடும் கழிப்பறை திட்டமானது, இந்த வர்த்தகநாமத்தின் வலிமையை எடுத்துக்காட்டுவதோடு, இது மிகவும் முக்கியமான இடங்களில் அத்தியாவசியமாக காணப்படும் தேவையை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகிறது.
2023ஆம் ஆண்டின் உலக கழிப்பறை தினத்தை நாம் கொண்டாடும் நிலையில், ஹம்மிங்பேர்டைப் போலவே, ஒவ்வொரு சிறிய முயற்சியும் முக்கியமானது என்பதை நிரூபிக்கும் கூட்டு நடவடிக்கையின் மாற்றும் சக்திக்கு Harpic ஒரு சான்றாக திகழ்கின்றது.
இதன் மூலம், இலங்கையின் எதிர்காலத்திற்கும் அதற்கு அப்பாலும் தூய்மையான, ஆரோக்கியமான, கண்ணியமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் சாதகமான மாற்றத்தின் பங்காளர்களாக இருக்க Harpic அனைவரையும் ஊக்குவிக்கிறது.