எனவே அவற்றை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகளினை தெரிந்து கொள்ளுங்கள் .
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சினைகள் நீங்குவதுடன், சிறுநீர்ப்பை பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
பற்களில் பிரச்சினை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
வயிற்றுப்போக்கினால் அவஸ்தைப்படுபவர்கள், நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.
நாவல் பழங்களை சாப்பிட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளி நோய்களுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
இவ்வாறான நன்மைகளினை கொண்ட நாவல் பழத்தினை உட்க்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளினை பெற்றுக்கொள்ளுங்கள் .