லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து ஒக்டோபர் 19 ம் திகதி உலகெங்கும் வெளியான திரைப்படம் லியோ. இத்திரைப்படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப்பெற்றது ஆனாலும் வசூல் ரீதியாக பெரிய சாதனையைப்படைத்துள்ளது.
இத்திரைப்படம் ஓக்டோபர் 19 ம் திகதி வெளியானது வெளியான முதல்நாளிலேயே 148 கோடி இந்திய ரூபாவை வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
லியோ திரைப்படம் உலக அளவில் 540 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூல் செய்துள்ளது என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், லியோ திரைப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலின் காணொளி இன்று காலை 11 மணியளவில் வெளியானது. இந்தபாடலின் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.