மனிதர்களின் நேரத்தை மீதப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரோபோக்கள் தற்போது அதிகளவான மேற்கத்தேய நிறுவங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் திரைப்படத்தில் வரும் காட்சிகளை போன்ற சம்பவம் ஒன்று தென்கொரியாவின் தொழிற்சாலை ஒன்றில் நடந்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தென்கொரியாவில் உள்ள உணவு தொழிற்சாலையில் காய்கறிகளை தூக்கி அவற்றை அரைக்கும் இயந்திரத்தில் போடுவதற்காக ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பணியில் அமர்த்தப்பட்டிருந்த ரோபோ ஒன்று தொழிநுட்பக் கோளாறின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன் அதனை பழுது பார்க்க வந்த தொழில்நுட்ப வல்லுநரை எதிர்பாராதவிதமாக அந்த ரோபோ குறித்த காய்கறிகள் அரைக்கும் இயந்திரத்தினுள் தூக்கி வீசியுள்ளது.
உடனடியாக அருகில் இருந்த ஏனைய பணியாளர்கள் அந்த இயந்திரத்தினை நிறுத்தி தொழில்நுட்ப வல்லுநரை அருகிலிருந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதுடன் இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.