இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூரின் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பாடல்கள்,சமீபத்தில் வெளியாகி அதிக கவனம் பெற்றிருந்தது.
இந்நிலையில், 'அனிமல்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.அதன்படி, இப்படத்தின் டிரைலர் இம்மாதம் 23-ஆம் திகதி வெளியாகவுள்ளதாக இயக்குநர் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றினை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.