கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் பெரிதாக இல்லாவிட்டாலும். அதனைத்தொடர்ந்து நல்ல வசூல் வேட்டையை நடத்தியது.
இத்திரைப்படம் வெளியாகி 4 நாள்களில் உலகளவில் 35 கோடி இந்திய ரூபாவை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திரைப்படம் ராகவா லாரன்ஸிற்க்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு வெற்றித்திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட ராகவா லாரன்ஸ்
“எனக்கு இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனத்துக்கு நான் மீண்டும் கால்ஷீட் தருகிறேன். குறித்த திரைப்படத்தை அவர் இயக்கினாலும் இல்லை வேறு யார் இயக்கினாலும் நான் நடிக்க தயார்” எனக் கூறியுள்ளார்.