Sooriyan FM Gossip - அடர்த்தியான கூந்தலை விரும்புபவரா ? நீங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
647 Views
முடி நீளமாக இருந்தாலும் அடர்த்தி இல்லையென்றால் பார்ப்பதற்கு அழகாக இருக்காது.கூந்தல் குறைவாக இருந்தாலும் அடர்த்தியாக இருக்க நிறைய வழிமுறைகளை பின்பற்றி இருப்போம் அவை சரியான முடிவினை தந்து இருக்காது.கூந்தல் அடர்த்தியாக காண்பிக்க சில வழிகள் உண்டு. மெல்லிய கூந்தல் என்பது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். பெண்களை போன்று ஆண்களுக்கும் இது உண்டாகலாம்.கூந்தல் மெலியவும் உடைந்து போகவும் பல காரணங்கள் உண்டு. கூந்தலை அழகாக மாற்ற அடர்த்தியாக வைக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முட்டையுடன் சிறிது ஒலிவ் எண்ணெய் சேர்த்து அனைத்தையும் சேர்த்து ஒன்றாக அடித்து உச்சந்தலை முதல் நுனி முடி வரை தடவி எடுக்கவும். சுமார் 30 நிமிடங்கள் உச்சந்தலையில் விட்டு பிறகு வெதுவெதுப்பான நீர் நீரில் ஷாம்பு கொண்டு தலைமுடியை நன்றாக சுத்தம் செய்யவும்.
ஆரஞ்சுப் பழத்திலிருந்து சாறு எடுத்து அதை முடி மற்றும் உச்சந்தலையில் நன்றாக தடவி விடவும்.பிறகு 1 மணி நேரத்துக்கு பிறகு கூந்தலை அலசி எடுக்கவும்.
அவகாடோவை மசித்து இரண்டையும் நன்றாக கலந்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவி விடவும். 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.
கற்றாழை ஜெல்லினை முடி மற்றும் உச்சந்தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து கூந்தலை அலசி எடுக்க வேண்டும். கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெய் கலந்து பயன்படுத்தலாம்.
மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை முறையினை பின்பற்றி வந்தால்,அடர்த்தியான கூந்தலை நீங்கள் எளிதில் பெறலாம்.