நமது உடல் மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலானவர்களுக்கு இருக்கின்ற எண்ணம்தான். இந்த முள் சீத்தா உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது .
முள் சீத்தா இலைகளுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உள்ளது. உடலுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியை தந்து புற்றுநோய் செல்களை உடலில் வரவிடாமல் காக்கும்.
நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு முள் சீத்தாப்பழம் ஒரு அற்புதமான தீர்வை கொடுக்கிறது. சர்க்கரையின் அளவை இது அதிகரிக்காமல் உடலை சீராக வைத்திருக்க உதவுகிறது .
தேவையற்ற உணவுகளை அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவதால் இன்று பலர் அவதிப்படும் நிலை காணப்படுகிறது .இதனால் மலசிக்கல் ஏற்படுகிறது . முள் சீத்தா இலைகள் இந்த பிரச்சினைக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது. அஜீரண கோளாறுககள், தசைப்பிடிப்பு, வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தும்.
முள் சீத்தாப்பழம் முக அழகை மேம்படுத்தும். முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்கி, சருமத்தை பொலிவுற செய்யும் .
இவ்வாறான நன்மைகளினைக் கொண்ட முள் சீத்தாப்பழத்தினை உட்க்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளினை பெற்று ஆரோக்கியத்தினை மேம்படுத்திக்கொள்ளுங்கள் .