நடிகை நயன்தாரா தற்போது "அன்னபூரணி" மற்றும் "தி டெஸ்ட்" உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
‘கனா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி அதன் பின் ’நெஞ்சுக்கு நீதி’ மற்றும் சமீபத்தில் வெளியான’ லேபிள்’ வெப் தொடரை இயக்கிய அருண்ராஜா காமராஜ் நயன்தாராவிடம் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அதில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
அருண் ராஜா காமராஜ் மற்றும் நயன்தாரா இணையும் இந்த படம் அறம், ஐரா போல பெண்களை மையமாகக் கொண்ட ஒரு படமாக உருவாக இருப்பதாகவும்,இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில்,இந்த புதிய திரைப்படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.