மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம்,இரசிகர்கள் இடையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகி பெருமளவில் ஹிட் அடித்தது.
ஆனால் 'ஜப்பான்' படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில்,இந்த படத்தின் வசூல் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி இதுவரையில் 'ஜப்பான்' திரைப்படம் இந்திய மதிப்பில் 28 கோடி ரூபாய் வரையில் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில்,கார்த்தியின் 25 வது திரைப்படம் வசூலில் படு தோல்வியை சந்தித்துள்ளமை இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையில் கார்த்தியின் 'ஜப்பான்' திரைப்படத்திற்கு போட்டியாக வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்,எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கடந்த 10 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தினை திரையுலக பிரபலங்களும் பாராட்டி வந்த நிலையில்,இப்படம் தற்போது இந்திய மதிப்பில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஆகவே,நடிகர் கார்த்தியின் வசூல் சாதனையை ராகவா லாரன்ஸ்,எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் முறியடித்துள்ளது.