அதன் பின்னர்,மன்சூர்அலிகான் மீது பொலிசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,
பொலிஸ் நிலையத்தில் அவர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
அதன் பின்னர் மன்சூர் அலிகான் இன்று திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், "ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன்.என்னை மன்னித்துவிடு! ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்.
எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! " என்று குறிப்பிட்டு தனது மன்னிப்பை கேட்டிருந்தார்.
இந்நிலையில், மன்சூர் அலிகான் அறிக்கை வெளியாகி சில மணி நேரங்களில் நடிகை திரிஷா தனது எக்ஸ் தளத்தில்.... தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பவன் தெய்வம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு இரசிகர்கள் திரிஷா, மன்சூர் அலிகானை மன்னித்துவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த இரண்டு பதிவுகளும் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.