அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 5 இருபதுக்கு இருபது போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வரும் நிலையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இத் தொடரில் இந்திய அணி 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணிக்கு முதன் முதலில் தலைமை தாங்கும் வாய்ப்பு இத்தொடரின் மூலம் சூர்யகுமார் யாதவிற்கு கிடைத்திருக்கும் நிலையில் , இந்த தொடரில் தலைவராக செயற்பட்ட சூர்யகுமார் யாதவ் போட்டியின் வெற்றிக்கு பின்னர் கருத்து தெரிவிக்கையில், போட்டியை வென்று கொடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால் எந்த ஓர் அச்சமுமின்றி விளையாடினேன்.
அவுஸ்திரேலிய அணி 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்த போது சிறிய பதற்றம் இருந்தது. ஆனாலும் அனைத்து வீரர்களும் உற்சாகமாக இருந்தனர். இந்தப் போட்டியை வென்றால் அது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் என்று சக வீரர்கள் கூறினர்.
அணியை வழி நடத்தியது பெருமையாக உள்ளது. தலைவராக முதல் போட்டியிலேயே அணிக்கு பங்களிப்பு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.என்று அவர் கூறியுள்ளார்.