சமூக வலைத்தளங்களில் தினமும் பல்வேறு விதமான காணொளிகள் வைரலாகின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகளின் காணொளிகள் பாரியளவில் வைரலாகின்றன.
இந்த நிலையில் Akhal-Teke என்ற இனத்தைச் சேர்ந்த குதிரையின் காணொளிகளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் உரோமங்கள் பொன்னிறமும் வெள்ளியை உருக்கியத்தைப் போன்ற நிறத்தையும் கொண்டுள்ளமையே இதன் சிறப்பம்சமாகும்.
துருக்மெனிஸ்தான் நாட்டிலுள்ள பாலைவனப் பகுதியில் பெருவாரியாக காணப்படும் இந்த Akhal-Teke குதிரைகள், அதன் அழகான தோற்றத்திற்காகவே உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது.
அரிய வகை இனமான இந்த Akhal-Teke குதிரையின் பளபளக்கும் உரோமங்கள் காரணமாக தங்க குதிரை என்ற செல்லப் பெயர் கொண்டும் இது அழைக்கப்படுகின்றது.
மேலும் இந்த வகை குதிரைகள் உலகம் முழுவதும் மொத்தமாக 7,000 மாத்திரமே உள்ளதுடன் இது துருக்மெனிஸ்தானின் தேசிய விலங்காகவும் கருதப்படுகிறது.