ஒவ்வொரு நாளும் யாசகமாக பெறும் பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களைக் குவித்துள்ளதுடன் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை வாடகைக்கு எடுத்து வணிக வளாகங்களையும் கட்டி இந்தியாவின் பணக்கார யாசகராக திகழ்கின்ற யாசகரைப் பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவான செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இவர் கோடீஸ்வரராக மாறியுள்ள போதிலும் தற்போதும் யாசகம் பெறும் தொழிலை நிறுத்தாமல் அதனை தொடர்ச்சியாக செய்து வருகின்றார்.
யாசகம் பெறுவதை நிறுத்திவிடுமாறு இவரது குடும்பத்தினர் பலமுறை கூறியும் அதற்கு மறுப்பு தெரிவித்த இவர் தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த யாசகத்தை விட முடியாது என்றும் தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.
திருமணமாகி இரண்டு மகன்கள், மனைவி, சகோதரர், தந்தையுடன் குடும்பமாக வசித்து வரும் இவரது சொத்து மதிப்பு 24 கோடி ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.