பொதுவாக நாம் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் போது முதலில் நமக்கு சிக்கலாக அமைவது தங்குமிடமும், உணவும்தான். சில நேரங்களில் சுகாதாரமான உணவுகள் கிடைக்காது பலரும் உணவு ஒவ்வாமைக்கும் இதர நோய்களுக்கும் ஆளாகின்றனர்.
ஆனால், குறித்த இந்த பெண்ணுக்கு 37 ற்கும் மேற்பட்ட வகையான உணவுகள் உணவு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்ற நிலையில் அதனைப் பற்றி சமூக வலைத்தளங்களில் காணொளிகளை வெளியிடுவதை அவர் தனது தொழிலாகச் செய்து வருகிறார்.
21 வயதான இவர் தென் கொரிய நாட்டின் சியோல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் "உயிரை விடுவதற்கு புதுமையான 37 யோசனைகள்" என்ற பெயரில் சமூக வலைதளத்தில் தன்னுடைய உணவு ஒவ்வாமை குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றார்.
தனக்கு பிடிக்காத உணவுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமென்றும் இருப்பினும் தனக்கு பிடித்தமான எண் 37 என்பதால் அதனை குறிப்பிட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையிலேயே தன்னுடைய பிரச்சினை குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் காணொளிகளை பகிர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.