பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 332 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி நேற்றைய 4வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
பங்களாதேஷின் சில்ஹெட் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 310 ஓட்டங்களையும் நியூஸிலாந்து அணி 317 ஓட்டங்களையும் பெற்றன.
7 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 338 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து 332 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் நியூஸிலாந்து அணி நேற்றைய 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்றைய இறுதி நாளில் 219 ஓட்டங்களைப் பெறும் நோக்கில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடவுள்ளதுடன் பங்களாதேஷ் அணி வெற்றி பெற வேண்டுமெனில் 3 விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.