நெல்லிக்காய் உடல், சருமம், கூந்தல் என மூன்றுக்குமே அதிக ஆரோக்கியம் தருகிறது.இளமையை தக்க வைக்கும் சிறந்த கனி என்பது போல இது முடி உதிர்தல், இளநரை, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்கும் வல்லமை கொண்டது.
முடியை கருமையாக வைத்திருப்பதுடன் எல்லாவிதமான கூந்தல் பிரச்சனைக்கும் ஏற்றதாக உள்ளது.இதில் விற்றமின் சி இருப்பதால் கூந்தலுக்குஅதிக நன்மைகளை தருகின்றது.இந்த நெல்லிக்கனியை வைத்து கூந்தலுக்கு என்னவிதமான பராமரிப்பு செய்யலாம் என்று பார்க்கலாம்.
நெல்லிக்காயின் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.பின்பு நீங்கள் தலை குளிக்கும் போது இந்த பொடியை தலையில் தேய்த்து குளிக்கலாம்.
நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி சுத்தமான தேங்காயெண்ணெயில் போட்டு வெயிலில் வைக்கவும். தொடர்ந்து ஒருவாரம் வரை வைத்து இருந்தால் நெல்லியின் சாறு முழுவதும் எண்ணெயில் இறங்கும்.பிறகு தூங்க செல்வதற்கு முன்பு கூந்தலில் நன்றாக மசாஜ் செய்து காலையில் கூந்தலை அலச வேண்டும்.
நறுக்கப்பட்ட நெல்லிக்காய் துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து சுமார் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து அந்த தண்ணீரை கொண்டு கூந்தலை அலசுவது கூந்தலுக்கு நன்மை பயக்கும்.
அளவான நீர் விட்டு நெல்லிக்கனியை ஊறவைத்து மறுநாள் காலையில் நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கவும். அந்த பேஸ்ட்டை கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வரவும்.
மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை முறையை பின்பற்றி வந்தால் நீண்ட, ஆரோக்கியமான கூந்தலை பெற்று, கூந்தலில் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.