SooriyanFM Gossip - WhatsAppஇல் வெளிவரவுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
476 Views
உலகளவில் 2 Billionக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட Metaவின் Instant Messaging தளமான WhatsApp புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. அதாவது Chat பக்கத்தில் பயனர்களின் Last Seen Optionஇல் பயனர்களின் Status பற்றிய தகவலும் இனி காண்பிக்கப்படக்கூடிய வகையிலான புதிய வசதி அறிமுகமாகவுள்ளது. BetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த வசதியானது தற்பொழுது Androidக்கான WhatsApp Beta Version 2.23.25.11இல் சோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த வசதியின் சிறப்பம்சம் என்னவெனில் பயனர் ஒருவர் Last Seen வசதியை Enable செய்து வைத்திருந்தால் அதன் கீழ்ப்பகுதியில் பயனர்களின் Status பற்றிய தகவலும் காண்பிக்கப்படும்.
WhatsApp Chat பக்கத்தில் பயனர்களின் பெயருக்கு கீழ்ப்பகுதியில் அவர்களது Last Seen காண்பிக்கப்படும். தற்பொழுது அந்த இடத்தில் புதிய வசதியாக பயனர்கள் Status ஏதேனும் வைத்திருந்தால் அது பற்றிய தகவலும் காண்பிக்கப்படும். WhatsAppஇன் Privacy Settings பகுதியில் இந்த புதிய வசதியை Enable செய்துகொள்ள முடியும்.
எனினும் இந்த வசதி தற்பொழுது சோதனை அடிப்படையில் உள்ளது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் இந்த வசதி வழங்கப்படும் என்று WhatsApp தெரிவித்துள்ளது.