ஆண்களுக்கான ஐபிஎல் போட்டிகளை போன்று மகளிருக்கான ஐபிஎல் போட்டிகளும் மிகவும் பிரபலமாகி வருகிறது.
இந்நிலையில் மும்பையில் டிசம்பர் 9 ஆம் திகதி நடைபெறும் மகளிர் ஐபிஎல் 2024 பருவ காலத்திற்கான ஏலத்தில் 165 விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த ஏலப் பட்டியலில் 104 இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளும், 61 வெளிநாட்டு வீராங்கனைகளும் உள்ளனர்.
61 வெளிநாட்டு வீராங்கனைகளில் 15 பேர் ஐசிசியின் முழு உறுப்பினர் அல்லாத நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் என பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஐந்து அணிகளில் மொத்தமாக 21 வெளிநாட்டு வீராங்கனைகள் உட்பட, 60 வீராங்கனைகள் ஐந்து அணிகளில் தக்கவைக்கப்பட்டனர். 29 வீராங்கனைகள் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
குஜராத் ஜெயன்ட்ஸ் அணி அதிக தொகையான 5.95 கோடி இந்திய ரூபாவுடன் ஏலத்தில் களமிறங்கவுள்ளது. அவர்கள் அதிகபட்சமாக 10 வீராங்கனைகளை வாங்கலாம்.
நடப்பு சம்பியனான மும்பை இந்தியன்ஸ் ஐந்து இடங்களுடன் மிகச்சிறிய தொகையுடன் (2.1 கோடி இந்திய ரூபா ) ஏலத்தில் களமிறங்க உள்ளது.
டெல்லி கெப்பிடல்ஸ் 2.25 கோடியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 3.35 கோடியும், உபி வாரியர்ஸ் 4 கோடியும் வைத்துள்ளன.
இலங்கை அணியிலிருந்து சில வீராங்கனைகள் ஏலத்தில் வாங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.