கிவிப் பழத்தில் எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் தேவையான கல்சியம் வளமான அளவில் நிறைந்துள்ளது.இதனால் நீங்கள் உட்க்கொள்ளும் போது சிறந்த பலன்களை பெற்று கொள்ளலாம் .
கிவிப் பழத்தில் செரடோனின் அதிக அளவில் உள்ளது. இது செரிமானம் மற்றும் இதயத்தின் செயற்பாட்டிற்கு அவசியமானது . கிவிப் பழத்தை ஒருவர் சாப்பிட்டால், அது இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் .
உடலால் போதிய அளவில் அத்தியாவசிய அமினோ அமிலங்களை உற்பத்தி செய்ய முடியாது. எனவே போதிய அளவு அமினோ அமிலங்கள் கிடைக்க கிவி பழத்தினை உட்க்கொள்ளுங்கள் .
கிவிப் பழத்தில் நார்ச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன . இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவி, இதய நோயின் அபாயத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தைத் தடுக்கும்.
கிவிப் பழம் ஆஸ்துமாவை சரிசெய்யும் திறன் கொண்டது. இதற்கு இதில் உள்ள விற்றமின் சி தான் காரணம். ஆய்வுகளில் கிவிப் பழத்தை வாரத்திற்கு 1-2 சாப்பிடுவதன் மூலம், சுவாச நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.
இவ்வாறான நன்மைகளைக் கொண்ட கிவிப் பழத்தினை உட்க்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளினை பெற்று ஆரோக்கியத்தினை மேம்படுத்திக் கொள்ளுங்கள் .