பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்புகள் பொதுவாக குளிர் காலத்தில் வெப்பமான இடங்களில் வசிக்க விரும்புகின்றன.இதன் காரணமாக பல சந்தர்ப்பங்களில் நம் வீட்டில் உள்ள காலணிகள் அல்லது மிதமான வெப்பநிலை நிலவும் வீட்டின் மூலையிலோ அல்லது வேறு ஏதேனும் பொருட்களினுள்ளேயோ இவை ஒளிந்துகொள்கின்றன.
மனிதர்கள் வாழும் வீடுகள் அல்லது பயன்படுத்தும் பொருட்களுள் பாம்புகள் பதுங்கி இருக்கும் காணொளிகள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளன.
அண்மையில் அது போன்ற ஒரு காணொளி வைரலாகி சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பலரையம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தலைக்கவசம் ஒன்றினுள் ஒளிந்து கொண்டு தனது தலையை மட்டும் வெளியே நீட்டியபடி இருக்கும் பாம்பினை காணொளியாக பதிவு செய்த நபர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கம் அந்த காணொளியினை பதிவிட்டுள்ளதுடன் இனி மோட்டார் வண்டியினை பயன்படுத்துவோர் தலைக்கவசத்தை பயன்படுத்தும் போத அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் அவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினையும் பயத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.