அதிலும் குறிப்பாக கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்களுக்கு பல்வேறு வகையான சிகிச்சை முறைமைகள் காணப்படுகின்றன. ஆனால் பெண் ஒருவர் தனது கண் சிகிச்சைக்காக அவர் தெரிவு செய்த முறை வித்தியாசமானதாக அமைந்துள்ளதுடன் அது தொடர்பில் அவர் பகிர்ந்துள்ள காணொளிகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதில் அவர் சத்திர சிகிச்சையோ, லேசர் முறையிலான சிகிச்சையோ பெறாது அட்டைப் பூச்சிகளின் மூலம் சிகிச்சை பெறுகிறார்.
குறித்த இந்த பெண் தனது இரு கருவிழிகளிலும் தைரியமான முறையில் அட்டைப் பூச்சிகளை வைத்து சிகிச்சை பெற்றுக்கொள்கிறார். அதுமட்டுமன்றி அதை காணொளியாக பதிவு செய்து தனது சமூகவலைத்தள பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளதுடன் அந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
Girudin Vision என்று அழைக்கப்படும் இந்த சிகிச்சை முறையில் இரண்டு கரு விழிகளிலும் அட்டைப் பூச்சிகளை விட்டு அதன் மூலம் கண் பார்வையை மேம்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இந்த அட்டைப் பூச்சிகள் கண்களின் கருவிழிகளில் ஊர்ந்து செல்வதுடன் அவை கண்பார்வையை மேம்படுத்தும் திரவத்தை வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இது ஆபத்தான சிகிச்சை என கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் குறித்த பெண், அது மிகவும் சிறப்பான சிகிச்சை முறை என்றும் இந்த சிகிச்சைக்கு முன்னராக இருந்ததை விட தற்போது தனது கண்பார்வை சிறப்பாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.