ஜப்பானில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களின் கன்னத்தில் அறைவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
உலகில் இருக்கின்ற பல உணவகங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக வித்தியாசமான நடைமுறைகளைக் கையாள்கின்றன.
இதனடிப்படையில் ஜப்பானின் பிரபலமான உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு கன்னத்தில் அறையும் சேவை வழங்கப்படுகிறது. இதற்கு 300 யென் வசூலிக்கப்படுவதுடன் அங்கு வரும் விருந்தினர்கள் இதனை பெரிதும் விரும்புவதாக தெரிவிக்கின்றனர். கன்னத்தில் அறை வாங்குவதற்காகவே இந்த உணவகம் பிரபலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெண் பணியாளர்கள் மாத்திரமன்றி ஆண் பணியாளர்களும் இந்த பணியை செய்கின்றனர். அதிலும் குறிப்பாக வாடிக்கையாளர்களின் விருப்பப்படி ஆண் அல்லது பெண் பணியாளர்கள் கன்னத்தில் அறைகின்றனர். அதிலும் குறிப்பிட்ட பணியாளரிடம் இருந்து அறை வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு 500 யென் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விநோத பழக்கமானது கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும் இதற்காக அதிக பெண் ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.