Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
08
சருமத்தை மிளிரச்செய்யும் அப்பிள் பழம்...!

Sooriyan FM Gossip - சருமத்தை மிளிரச்செய்யும் அப்பிள் பழம்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

341 Views
பொதுவாக முகத்திற்கு பெக் பயன்படுத்தும் போது பழங்கள் கொண்ட பெக் பயன்படுத்துவதால் சருமத்திற்கு மிகச் சிறந்த நன்மைகள் கிடைக்கிறது.குறிப்பாக அழகு சிகிச்சையில் தனித் தன்மைக் கொண்டது அப்பிள் பழம். 
தினமும் ஒரு அப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்று சொல்வார்கள்.அப்படி உடலுக்கு தரும் ஆரோக்கியம் போலவே அப்பிள் பழத்தில் இருக்கும் சத்து சருமத்திற்கும் தருகிறது.விற்றமின் C ,A ,போன்ற ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது.இவை உடலுக்கு நன்மை தருவதை போன்றே சருமத்துக்கும் நன்மை தருகிறது.இத்தனை நற்குணங்கள் நிறைந்த அப்பிள் பழத்தை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

நன்றாக கட்டியில்லாமல் அப்பிள் பழத்தை மசித்து எடுத்துகொள்ளவும். பிறகு அதில் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து சருமத்திற்கு தடவி 15 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும்.

அப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதனுடன் கற்றாழை ஜெல் சிறிதளவு சேர்த்து பேஸ்ட் பதத்துக்கு கலந்து சருமத்திற்கு தடவி, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

அப்பிள் பழத்தை நேரடியாக மசிக்காமல் அரைவேக்காடு வேகவிடவும். பிறகு இதை எடுத்து தோல் உரித்தால் தோல் எளிதாக வந்துவிடும். அதை கைகளால் மசித்து அதனுடன் வாழைப்பழம் சேர்த்து இரண்டையும் கலந்து மிக்ஸியில் அரைத்தால் நன்றாக க்ரீம் பதத்துக்கு கிடைக்கும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தின் மென்மை பாதுகாப்பாக இருக்கும்.

சுத்தமான தேனுடன் நன்கு மசித்த அப்பிள் பழத்தை சேர்க்கவும்.பின்பு நன்றாக க்ரீம் போன்ற பதத்துடன் கலந்து சருமம் முதல் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவ வேண்டும்.

அப்பிள் பழத் தோலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.அதில் சிறிதளவு தேன்,ரோஜா இதழ்களை கலந்து,சருமத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சருமத்திற்கு சிறந்த முறையில் பொலிவை தரும் அப்பிள் பழத்தை மேற்குறிப்பிட்டுள்ள முறையின் படி செய்து வந்தால் இயற்கை முறையில் சருமத்தை பாதுகாத்து வரலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top