இந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடரின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட 50,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டது.
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகிய இரண்டு மைதானங்களினதும் மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கே இவ்வாறு இந்த பணம் வழங்கி வைக்கப்பட்டது.
தேசிய மைதான பராமரிப்பாளரான கொட்ப்ரே தாபரவேின் தலைமையில் இந்த வெகுமதிகள் மைதான பராமரிப்பாளர்கள் 253 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் குறித்த தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. எனினும், மைதான ஊழியர்களின் கடும் உழைப்பின் பயனாக இந்த தொடர் நடத்தி முடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.