இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது. பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது.
உடல் எடை , சளித் தொல்லை, ஜலதோஷம், இருமல், நீர்க்கோவை, வயிற்று வலி, கண்பார்வை , வயிற்றுப்போக்கு அனைத்திற்கும் சிறந்த மருந்தாகும்.
இரத்த சோகை, மூக்கில் இரத்த கசிவு, மூளையில் ஏற்படும் இரத்த கசிவு, இரத்த புற்றுநோய் ஆகிய அனைத்து நோய்களும் குணமாக அருகம்புல் உதவிக்கொள்கிறது .
சிறுநீர்ப் பையில் உள்ள கல் நீங்க, நரம்பு தளர்ச்சி நீங்க, இதயக் கோளாறு குணமாக, தோல் வியாதிகள் குணமாக அருகம்புல் சிறந்த மருந்து.
வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வந்தால் நாளடைவில் சரியாகிவிடும் .
அருகம்புல் சாறு உடல் வெப்பத்தை சீராக பேண உதவுகிறது . பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது.
இவ்வாறான நன்மைகளினைக் கொண்ட அருகம்புல்லினை உட்க்கொண்டு அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளினை பெற்றுக்கொள்ளுங்கள் .