நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.
இவர் நடனக்கலைஞ்சராக மற்றும் தொலைக்காட்சி நிகழ்சசித்தொகுப்பாளராக என பல துறைகளில் கைதேர்த்தவராக இருந்த போதிலும் கோலமாவு கோகிலா இவருக்கு ஒரு பெரிய புகழைக் கொடுத்தது .
அதனைத்தொடர்ந்து எல்கேஜி’, ‘கூர்கா’, ‘டாக்டர்’, ‘நெற்றிக்கண்’, ரஜினியின் ‘அண்ணாத்த’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘பிஸ்ட்’, ‘ஜெயிலர்’ என பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவை வளம் வரும் வெற்றிகரமான நகைச்சுவை நடிகர்களில் இவரும் ஒருவர்.
இந்த நிலையில் நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் இன்று நடைபெற்றுள்ளது. பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துள்ளார். இவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதோடு பல சினிமா பிரபலங்கள் இவர்களை வாழ்த்தியுள்ளனர்.