கார் ஜன்னலில் மாட்டிக்கொண்ட குழந்தையை வேகமாக செயற்பட்டு பத்திரமாக மீட்க உதவிய நபரின் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. காரின் ஜன்னல் கதவு தானாக மூடப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த குழந்தையை மீட்ட நபருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
‘ஜன்னலில் மாட்டிக் கொண்ட குழந்தையின் தலை’ என தலைப்பிடப்பட்ட இந்த காணொளிகள் பகிரப்பட்டு வருவதுடன் காரின் உள்ளே அமர்ந்திருந்த பெற்றோரின் கவனயீனமே இதற்கான காரணம் என்றும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும் சந்தர்ப்பங்களில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.