கங்காருக்களின் நாடு என்று கூறப்படும் அவுஸ்திரேலியாவில் அதிகளவிலான விஷம் நிறைந்த பாம்புகள் காணப்படுகின்றன.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். இந்த பாம்புகளைக் கண்டால் வீரர்கள் கூட பயப்படுவார்கள். அண்மையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாயார் ஒருவர் தனது குழந்தையின் உடைகளை வைத்திருந்த அலுமாரியில் உள்ளே பாம்பு ஒன்று இருந்ததை அவதானித்து உடனடியாக பாம்பு பிடி வீரர்களுக்கு அறிவித்ததுடன் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்திய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் குறித்த காணொளிகளைப் பகிர்ந்ததன் பின்னர் பல அதிர்ச்சியான பல செய்திகள் கிடைத்திருந்தன. அதாவது உலகிலேயே மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளில் இரண்டாவது இடத்திலுள்ள பாம்பே இவரது குழந்தையின் ஆடைகளுக்குள் ஒளிந்திருந்தது என்பது தற்போது தெரியவந்துள்ளது.