நடிகர் விஷாலைப் பற்றி அடிக்கடி ஏதாவது காணொளிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.
அண்மையில் அமெரிக்காவில் பெண் ஒருவருடன் சுற்றிய காணொளி மற்றும் புகைப்படங்கள் வைரலான நிலையில் அது தான் இல்லை என்றும் அந்த காணொளி
உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் விளக்கம் கொடுத்திருந்தார் .
இந்நிலையில் இந்த வாரம் விஷால் மதுபான நிலையம் ஒன்றில் மதுபானங்களை வாங்குவதற்கு வரிசையில் நின்றவர்களை அங்கிருந்து அடித்து விரட்டுவது போன்ற காணொளி வைரலாகி வருகின்றது .
இருப்பினும் இந்த காணொளி உண்மை இல்லை என்றும் இது இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ரத்னம் திரைப்படத்தின் ஒளிப்பதிவின் போது எடுக்கப்பட்ட காணொளி எனவும் படக்குழுவினரால் தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.