நஜா என்னும் நடன கலையுடன் அவர் நடனமாடியதாக குறித்த காணொளியினைப் பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இறுக்கமும், மன அழுத்தமும் நிறைந்த வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியில் நம் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் விடயங்களில் ஒன்றாக நடனம் காணப்படுகின்றது.
இருப்பினும் பொது வெளியில் நடனம் ஆடுவதற்கு பெரும்பாலான பெண்கள் விருப்பம் கொள்ளாத நிலையில் சமூக வலைத்தளங்களின் வருகைக்கு பிறகு அந்த நிலையிலிருந்து விலகி அதிகளவிலான பெண்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது தங்கள் நடனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் திறந்தவெளி காரில் நடனம் ஆடியவாறே பயணத்தை மேற்கொண்ட காணொளி வைரலாகியதுடன் இவரின் நடனத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.