'எல்.ஐ.சி.' (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் .
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் சென்னையில் பூஜையுடன் ஆரம்பித்திருந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் தனது திரைப்படத்தின் பெயரை பயன்படுத்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பெயரை விக்னேஷ் சிவன் மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி படத்தின் பெயரை 'எல்.ஓ.சி' என விக்னேஷ் சிவன் மாற்றியுள்ளார் .
எனினும் விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.