வட்ஸ்அப் தற்போது மற்றொரு புதிய வசதியை சோதனை செய்து வருகிறது. அதாவது Androidஇல் உள்ளது போல் 'நியர்பை ஷேர்' ஃபைல் ஷேரிங் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. நியர்பை ஷேர் என்பது அருகில் உள்ளவர்களிடமிருந்து போன் மூலம் எளிதாக ஃபைல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.
தற்போது இந்த அம்சம் வட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. Android 2.24.2.17 பீட்டா வெர்ஷனில் வழங்கப்படுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
Android ஃபைல் ஷேரிங் வசதியைப் போலவே அனுப்புநர் பெறுபவருக்கு request அனுப்பி ஃபைல்களைப் பகிரலாம். வட்ஸ்அப் ஃபைல் ஷேரிங் வசதியைப் பயன்படுத்தி பயனர் தங்கள் contact list-இல் உள்ளளவர்களுக்கு ஃபைல்களை அனுப்பலாம்.
பயனர்கள் தங்கள் போனை shake செய்து request அனுப்பலாம். வட்ஸ்அப் ஃபைல் ஷேரிங் வசதி எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டதாகும்.
Android போன்ற வசதியாக இருந்தாலும் வட்ஸ்அப் ஷேரிங் உங்கள் contact list-ல் உள்ள பயனர்களுக்கு மட்டுமே உங்கள் டிவைஸ் Active ஸ்டேட்டஸ் காண்பிக்கும். பொது வெளியில் இருக்கும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.