SooriyanFM Gossip - வட்ஸ்அப் போல் இன்ஸ்டாகிராமில் பிரைவேட் போஸ்ட் அறிமுகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
404 Views
இன்ஸ்டாகிராம் செயலி பிளிப்சைடு (Flipside) என்ற புதிய வசதியை சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியும் படி Post பதிவிடலாம். அதாவது வட்ஸ்அப் உள்ளது போல் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் தெரியும்படி Post பதிவிடலாம். இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது என நிறுவனம் அறிவித்துள்ளது.
பயனர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்திற்கு மட்டும் தெரியும் படி Post பதிவிட வேண்டும் என்றால் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
திரை பிரபலங்கள், கிரிக்கெட் மற்றும் பல துறை பிரபலங்கள் பொதுவாக "finsta" அல்லது பேக் இன்ஸ்டா பயன்படுத்துவர். இது தங்களுடைய தனிப்பட்ட கணக்காக பயன்படுத்துவர். இந்தநிலையில் பிளிப்சைட் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ப்ரைமரி Account போலவே இதிலும் போஸ்ட், வீடியோ பதிவிடலாம். ஆனால் அது எல்லோருக்கும் தெரியாது. நீங்கள் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மட்டும் உங்கள் பதிவு காண்பிக்கப்படும்.
மேலும், இந்த பிளிப்சைட் அம்சத்தில் Profile picture, பெயர் மற்றும் பயோ போன்றவற்றையும் குறிப்பிடலாம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இது மற்றொரு இன்ஸ்டாகிராம் Account போலவே ஆகிவிடுகிறது. இந்த அம்சம் ஓரிரு வாரங்களில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.