Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
30
சருமத்திற்கு பொலிவை தரும் தக்காளி...!

SooriyanFM Gossip - சருமத்திற்கு பொலிவை தரும் தக்காளி...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

491 Views
பளபளப்பான சருமம் வேண்டும் என்று நாம் அனைவருமே ஆசைப்படுவோம். பெரும்பாலானோர் விளம்பரங்களை பார்த்து அதில் விற்கும் எல்லா வகை க்ரீம்களையும் வாங்கிப் பயன்படுத்துவார்கள். எப்போதும் நம்மை அழகாக, பொலிவாகவும் காட்டும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மிக எளிமையான மற்றும் அடிப்படையான சருமப் பராமரிப்பு விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும்.
சமையலில் மிக முக்கியமான இடம் தக்காளிக்கு உண்டு. இது உணவின் சுவையை கூட்ட மட்டுமல்ல சரும ஆரோக்கியத்திற்கும் பயன்படுகிறது. தக்காளியை நாம் பச்சையாகவே சாப்பிடலாம். இதில் விற்றமின் A, C சல்பர், குளோரின், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

இயற்கைப் பொருட்களை கொண்டு சரும அழகை மெருகூட்டலாம். நாம் தக்காளியை வைத்து சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் என்பது பற்றி காணலாம்.

தக்காளி துண்டை தினமும் இரவில் உறங்கும் முன் சருமத்தில் தேய்த்து விட்டு 15 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் கடலை மாவுடன் பால் சேர்த்து கொள்ளவும். அடுத்ததாக நறுக்கிய பாதி தக்காளியின் சாறு சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்யவும். பின்பு சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

பழுத்த தக்காளியை வெட்டி கற்றாழையுடன் சேர்த்து நன்றாக அரைத்து சருமத்தில் வட்ட வடிவில் மெதுவாக மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

தக்காளியை பேஸ்ட் போன்று அரைத்துக் கொண்டு அதில் அவகாடோ பழத்தை சிறிதளவு சேர்த்து முகத்தை நன்றாக கழுவி விட்டு அப்ளை செய்த பின் 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

ஒரு தேக்கரண்டி தக்காளி சாறுடன் , 3 அல்லது 4 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள சிறந்த இயற்கை வழிமுறைகளை தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு,சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top