எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட இந்த புளியை உட்கொள்ளவதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
புளியம்பழ இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரை ஜுரம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் களைப்பு நீங்க குடிக்கலாம்.
சருமப் பிரச்சினைகளை தடுக்க இந்த புளிக்கரைசலை தினசரி பருக்கள் உள்ள இடத்தில தடவி வந்தால் நாளடைவில் சருமம் பொலிவடையும்.
மேலும் தீராத வயிற்றுப்போக்கு பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் புளியமரத்தின் இலைகளை நன்றாக கழுவிய பின்பு சாப்பிட்டு வருவதன் மூலம் குணமாகும்.
உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு.
எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும்.புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையாக கிடைக்கிறது.
தினமும் நமது உணவில் புளியை சேர்த்து உட்க்கொண்டு வந்தால் நம்முடைய உடலுக்கு தேவையான விற்றமின்களை பெற்று ஆரோக்கியத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.